Saturday, October 27, 2012

அம்பத்தூரில் இன்று இலவச சித்த மருத்துவ முகாம்

சென்னை அம்பத்தூரில் மர்ம காய்ச்சலைத் தீர்க்க உதவும் இலவச சித்த மருத்துவ ஆலோசனை முகாம் சனிக்கிழமை (அக்.27) நடைபெறுகிறது.

அம்பத்தூர் ஓ.டி. பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை அருகிலேயே இந்த முகாம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமுக்கு

தமிழ் மருத்துவக் கழகத்தின் அவிழ்தம் சித்த மருத்துவமனையும் மனித நேயம் அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. முகாமில் கலந்து கொள்வோருக்கு உடல்நலப் பிரச்னை உள்ள நிலையில் நிலவேம்புக் குடிநீர் கஷாயம், ஒரு வாரத்துக்கு உரிய நிலவேம்புக் குடிநீர் (தூள்) உள்ளிட்ட

சித்த மருந்துகள் இலவசமாக அளிக்கப்படும்.

No comments:

Post a Comment