Saturday, September 10, 2011


சரிவைச் சந்திக்கிறதா தேசிய சித்த மருத்துவ நிறுவனம்?


சரிவைச் சந்திக்கிறதா தேசிய சித்த மருத்துவ நிறுவனம்?

First Published : 05 Sep 2011 01:31:55 AM IST


சென்னை, செப்.4: மத்திய அரசின் நிதி ஆதரவு இருந்தும்கூட தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் முதுநிலை சித்த மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறித்து சித்த மருத்துவக் கல்வியாளர்கள் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர்.
தாம்பரம் சானடோரியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் இருந்தபோது, 2007-ம் ஆண்டு தேசிய சித்த மருத்துவக் கட்டட விரிவாக்கப் பணிக்கு ரூ.18 கோடியை ஒதுக்க ஆவன செய்தார். நான்கு ஆண்டுகள் கடந்தும்கூட கட்டடப் பணி இன்னும் தொடங்கவில்லை. மத்திய பொதுப்பணித் துறையிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேசிய சித்த மருத்துவமனையின் படுக்கை வசதி எண்ணிக்கை அதிகரிப்பை உள்ளடக்கியது இந்தக் கட்டட திட்டப் பணி. இப்போது தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவமனையில் மொத்தம் 120 படுக்கைகள் மட்டுமே உள்ளன. இந்த படுக்கை வசதியை அதிகரித்தால் முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கையை பழையபடி அதிகரிக்க மத்திய இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளிக்கும்.
இதே போன்று சித்த மருத்துவ ஆசிரியர் எண்ணிக்கையை காரணம் காட்டியும், முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் 48-லிருந்து 25-ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. ஒப்பந்தப் பணியில் இருந்த நான்கு மருத்துவ ஆசிரியர்களுக்கு, அவர்களது பணிக் காலத்தை நீட்டிப்பு செய்யாமல் அண்மையில் பணியிலிருந்து தேசிய சித்த மருத்துவமனை நிர்வாகம் அனுப்பிவிட்டது.
தினமும் ஆயிரக்கணக்கான ஏழை நோயாளிகள் தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வருகின்றனர். எனினும் சித்த மருந்துகள் அனைத்தும் போதிய அளவுக்கு இல்லை என்ற புகாரும் உள்ளது.

No comments:

Post a Comment